வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம்….இயக்குனர் கொடுத்த அப்டேட்

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில் என பலர் நடித்துள்ளனர். 

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இருப்பினும் பெரும்பாலான ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் ஞானவேல் பேசுகையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி கூறியுள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கலாம் என ஐடியா உள்ளது. ரஜினி இதற்கு ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை தொடர்ந்து கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஆகையால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க சம்மதிப்பாரா ? என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Recent Post

RELATED POST