நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறிர்களா? – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்

நோயின்றி வாழ வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை உண்டு, அது பெரும்பாலும் சிலருக்கு முடியாத காரியமாக இருக்கிறது, ஆனால் நோயின்றி வாழ்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள்…

அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்துவிட வேண்டும், பின்னர், முதலில் செய்ய வேண்டியது காலைக்கடன்களை முடிப்பது தான்.

தினமும் குறைந்தபட்சம் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதனை அதிகாலை 20 நிமிடம் என்றும், மாலை 20 நிமிடம் என்றும் பிரித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் காலையில் 40 நிமிடம் உடற்பயிற்சி அவசியம்.

உடற்பயிற்சி என்றால் ஓடுவது, உட்காருவது, நடப்பது, குனிந்து நிமிர்வது போன்றவைகளே, மூச்சுப் பயிற்சிக்காக ஒரு 5 நிமிடம் ஒதுக்குவது நல்லது.
நொறுக்குத் தீனி சாப்பிடும் பழக்கத்தை குறைக்கவும்.

உறங்குவதற்கு காற்றோட்டமுள்ள நல்ல இடத்தில் உறங்க வேண்டும்.

சாப்பிடும் பொழுது பேசாமல் சாப்பிட வேண்டும், மேலும் சாப்பாட்டை நன்றாக மென்று, சுவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

அசைவம் சாப்பிடுவோர் அதனை குறைத்து கொள்வது நல்லது. ஏனெனில், முதுமை காலத்தில் அசைவ உணவுகள் சரியாக செரிமாணம் ஆகாது, எனவே முதியவர்கள் அசைவம் சாப்பிடுவதில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

உணவுகளில் உப்பு, காரம், புளிப்பு, சர்க்கரை அளவு சற்று குறைவாக இருப்பது நல்லது. இரவு சாப்பிட்ட பிறகு உடனடியாக சென்று படுக்கக்கூடாது. அரை மணி நேரமாவது கழித்து படுக்க வேண்டும்.

தினமும் ஏதாவது பழங்கள், காய்கறிகள், பழச்சாறு ஆகியவைகளை வேறு எதுவும் கலக்காமல் பச்சையாக உட்கொண்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக போய் சேரும்.

உணவு சாப்பிட்டபின் கடினமான வேலையில் ஈடுபட கூடாது. குளிக்கவும் கூடாது.
நிற்கும் போதும், உட்காரும் போதும், நடக்கும் போதும் நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

சின்ன சின்ன நோய்களுக்கு தாங்களாகவே மருந்து மாத்திரை எடுப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைகளையும் உட்கொள்ள கூடாது.

இவை அனைத்தையும் நீங்கள் பின்பற்றி வந்தால் உங்களிடம் நோய் நெருங்குவதற்கு பயப்படும். நீண்ட நாட்கள் ஆரோக்கியமாகவும் வாழலாம்.

Recent Post

RELATED POST