முன்னுரை:-
எந்த விதமான பொருட்களை சாப்பிடும் போது, முதுமையான தோற்றம் விரைவில் ஏற்படும் என்றும், அதற்கான காரணங்கள் பற்றியும் தற்போது பார்க்கலாம்.
விளக்கம்:-
வயது குறையவே கூடாது என்று பலருக்கும் ஆசைகள் இருக்கும். ஆனால், தற்போதைய காலத்தில், சிறு வயதில் இருக்கும் இளைஞர்கள் கூட அதிக வயதை கடந்தவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர். அதற்கு காரணமே உணவு பழக்கம் தான். அவற்றைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம்.
அந்த பொருட்கள்:-
- உப்பு
- ஆல்கஹால்
- குளிர்பானங்கள்
- துரித உணவு
- இறைச்சி
உப்பு:-
உப்பில்லாத பண்டம் குப்பையில் என்று சொல்வார்கள். ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.
ஆல்கஹால்:-
அழகாகவும், இளமையாகவும் இருக்கும் பல்வேறு பிரபலங்கள், பிறருக்கு தரும் முதல் டிப்ஸ் என்னவென்றால், அதிக தண்ணீர் குடிங்கள் என்பதே. ஆம், ஆல்கஹால் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவீர்கள்.
குளிர்பானங்கள்:-
குளிபானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி அதில் ஆபத்து ஏற்படுவது உறுதி தான். இந்த குளிர்பானங்களை குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.
துரித உணவு:-
தோல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நமது உடலின் ரத்தம் ஓட்டம் சீராக இருப்பதே. ஆனால், பாஸ்ட் புட், பீசா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம் ஏற்படும்.
இறைச்சி:-
அதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை அடைகிறீர்கள்.