இந்தியாவில் நிகழும் நான்கில் ஒரு மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக அமைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள ஒட்டுமொத்த இதய செயலிழப்பு நோயாளிகளில் 40% வரை இந்தியாவில் உள்ளனர். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நமக்கு மிகவும் பிடித்தமான சில உணவுகளை தவிர்ப்பது அவசியம். எண்ணெயில் பொறித்து தயாராகும் french friesஇல் உள்ள அதிக அளவிலான carbohydrates எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை.
இதனால் உடனடியாக உயரும் ரத்த சக்கரை அளவும், கொழுப்பும் இதயத்தை வெகுவாக பாதிக்கிறது. நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சக்கரை நிறைந்துள்ள Ice Creamகளில் கலோரிகள் அதிகம் இருப்பதால் உடல் எடை பராமரிப்பிற்கு சிக்கலாக அமைவதோடு, இதயத்திற்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. கொழுப்பு நிறைந்த பீட்ஸா அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த நாளங்களில் கொழுப்பு சேரும் அபாயம் உண்டாகிறது.
உடலின் வளர்சிதை மாற்றம், சக்கரை அளவுகள் மற்றும் பொதுவான ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் குளிர்பானங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதய நோய் மற்றும் உடல் எடை கூடுதலாக இருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட மற்றும் சிகப்பு இறைச்சியை தவிர்ப்பது நல்லது. சிகப்பு இறைச்சி அதிக அளவில் உட்கொள்பவர்களில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் மோசமான இதய செயல்பாட்டை கொண்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.
பலருக்கும் பிடித்த deep fry செய்யப்பட்ட சிக்கனை சாப்பிடுவது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி இதயத்தை பாதிக்கும் என்பதால் இது போன்ற உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து மிகுந்த பச்சை காய்கறிகள், பழங்கள் சேர்ந்த உணவு, சீரான உடற்பயிற்சி, சரியான தூக்கம் உள்ளடங்கிய வாழ்க்கை முறையே ஆரோக்கியமான நடைமுறையாக அமையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.