உளுந்தங்கஞ்சி செய்முறையும், பயன்களும்

தற்போதைய காலகட்டத்தில் நாம் சாப்பிடும் உணவில் எந்த அளவிற்கு சத்து நம் உடம்பில் சேறுகிறது என்றே தெரியவில்லை.. காரணம் நாம் சற்று கடினமாக சில வேலைகளை செய்தால், சீக்கிரமாகவே சோர்வடைந்து விடுகிறோம். மேலும், கை, கால், முதுகு, இடுப்பு வலி ஏற்படுகிறது.

உடல் வலிமைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மைபயக்கும் ஒரு உணவு உண்டு, அது தான் உளுந்தங்கஞ்சி.

உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

  • உளுந்தம்பருப்பு (கருப்பு உளுந்து) – ஒரு டம்ளர்
  • பச்சரிசி – அரை டம்ளர்
  • வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
  • பூண்டு – 20 பல்லு
  • வெல்லம் அல்லது கருப்பட்டி – தேவையான அளவு
  • தேங்காய் ஒரு மூடி – துருவியது

உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு இவை அனைத்தையும் ஒன்றாக இட்டு பருப்பு அளந்த டம்ளரில் 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை வைக்க வேண்டும்.

அது அடுப்பில் இருக்கும் சமையத்தில், வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

எட்டு விசில் முடிந்தவுடன் இறக்கி அதனை நன்கு மசித்து வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம். மேலும், நெய்யில் முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை இவைகளை வறுத்து சேர்த்தும் சாப்பிடலாம்.

வாரம் முன்று முறை எடுத்துக் கொள்ள உடம்புக்கு மிகவும் நல்லது.

உளுந்தங்கஞ்சியின் நன்மைகள்

  • முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
  • தோல் சுருங்காது
  • கண்களுக்கு ஆரோக்கியம்
  • எலும்புகள் தேயாது
  • பெண்களின் கரபப்பை வலுபெறும்

Recent Post

RELATED POST