கரப்பான் பூச்சிகள் முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. அணுகுண்டு வெடித்த போதும் இது உயிரோடு இருந்திருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. ஆம் கரப்பான் பூச்சிகளுக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
கதிர்வீச்சுக்களை தாங்கும் சக்தி மனிதர்களை விட பல ஆயிரம் மடங்கு கரப்பான் பூச்சிகளுக்கு உள்ளது.
கரப்பான் பூச்சிகள் எந்த உணவும் இல்லாமல் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழும் திறன் கொண்டது.
ஒரு ஜோடி கரப்பான் பூச்சிகளால் ஒரே வருடத்தில் நான்கு லட்சம் பூச்சிகளை பெருக்கமடைய செய்யும்.
புதிதாக பிறந்த கரப்பான் பூச்சி வெறும் ஏழு வாரத்தில் பெரிய பூச்சிகளாக மாறி இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது.
கரப்பான் பூச்சிகள் குளியலறை, சமயலறை, கழிவு நீர் தொட்டிகள் போன்ற இடங்களில் அதிகம் வாழும். ஏனென்றால் அங்குதான் அதற்கு உணவு கிடைக்கிறது.
பகலில் மறைந்து வாழும். இரவில் வெளியே வந்து தங்களுக்கான உணவை தேடி சாப்பிடும்.
கரப்பான் பூச்சி நம்மை கடிப்பதில்லை. ஆனால் அதில் ஒரு ஆபத்து உள்ளது. அது என்னவென்றால் தன் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை பிற பகுதிகளுக்கும் சென்று பரப்பிவிடுகிறது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.
கரப்பான் பூச்சியின் தலையை வெட்டிய பிறகும் அதனால் இரண்டு வாரங்கள் வரை உயிர் வாழ முடியும்.
கரப்பான் பூச்சி ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் அதனுடைய ரத்தம் வெண்ணிறமாக இருக்கும்.
எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை.
உலகில் இருக்கும் 4500 கரப்பான் இனங்களில் 1% தான் நம்முடன் வாழ்கின்றன. மற்றவை அடர்ந்த காடுகளில் வாழ்கிறது.
ஒரு கரப்பானால் 40 நிமிடங்கள் மூச்சை அடக்கிக்கொள்ள முடியும். ஒரு மனிதனால் 30 வினாடிகள்தாம் மூச்சை அடக்க முடியும்.
ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் கொண்டாடப்படும் ஆஸ்திரேலிய தினத்தில் கரப்பான்பூச்சி பந்தயம் நடத்தப்படும்.