நிலத்திலும் நீரிலும் வாழக் கூடிய உயிரினம் தவளை. இரண்டு இடங்களிலும் நிலவும் வெவ்வேறான சூழ்நிலைக்கேற்ப அவை சுவாசிக்க வேண்டும்.
தவளைகளுக்கும் நுரையீரல்கள் உள்ளன. ஆனால் விலா எலும்புகள் கிடையாது. அதன் காரணமாக மார்பை விரியவும் சுருங்கவும் செய்து காற்றை உள்ளே இழுப்பதும் வெளியே விடவும் முடியாது.
நிலத்தில் இருக்கும் போது தவளை தனது மூக்குத் துவாரங்கள் மூலம்தான் சுவாசிக்கிறது. அதில் ஒரு வாழ்வு அமைந்துள்ளது. தொண்டை தசைகள் துடிக்க வைப்பதன் மூலம் காற்றை உள்ளிழுக்கவும் வெளியேற்றவும் செய்கின்றது.
தசைகளில் சுருங்கி விரிய செய்வதுதான் துடிப்பது போல தெரிகிறது. தனது வாயை இறுக மூடி வைத்துக் கொண்டிருக்கும். அப்போதுதான் தொண்டை தசைகள் சுருங்கி விரிய முடியும்.
நிமிடத்திற்கு 120 முதல் 140 துடிப்புகள் வரை இருக்கும். நிலத்தில் இருக்கும் போது அதன் சருமம் நுரையீரல்களை விட சுவாசிப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது.
சருமம் ஈரமாக இருந்தால் தான் காற்றை கிரகித்துக் கொள்ள முடியும்.
சருமம் எப்போதும் ஈரமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்படி செய்ய அது ஒரு சளிப்பொருளை சுரக்கிறது. சருமம் காற்றையும் நீரையும் கிரகித்துக் கொள்கிறது. தவளைகள் வாய் மூலம் நீரை அருந்துவதில்லை.
தவளைகள் குளிர்ந்த ரத்த உயிரினங்கள். சூழ்நிலையில் தட்ப வெட்ப நிலைதான் உடலிலும் இருக்கும். மனிதர்களுக்கு இருப்பது போல எல்லா சூழ்நிலையிலும் ஒரே சீராக இருக்காது.
வெப்ப இரத்தம் கொண்ட உயிரினங்களுக்கு இவ்வாறு இருக்கும். குளிர்காலத்தில் தவளைகளின் உடல் குளிர்ந்து விடுவதால் அதை மறைவிடங்களில் பதுங்கி உறக்கம் கொள்கின்றன. அப்போது உடல் இயக்கங்கள் பெருமளவுக்கு குறைந்து விடுவதால் அதிக வெப்பம் தேவைப்படுவதில்லை.
குளிர்கால உறக்கத்திற்கு பிறகு மீண்டும் வெளியே வரும் தவளைகள்தான் கோஷ்டி கானம் போல கத்துகின்றன. ஆண் தவளைகள் மட்டுமே குரல் எழுப்பக் கூடியது.