உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை தீர்க்கும் பசலைக்கீரையின் பயன்கள்

இந்த அற்புதமான மருத்துவ பயன்கள் கொண்ட பசலைக்கீரை உடலில் ஏற்படும் பாதி பிரச்சினைகளை தீர்க்க வல்லது. அவ்வாறு பசலைக்கீரையில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி இப்போது பார்ப்போம்

பசலைக்கீரை வகைகளில் கொடிப்பசலை, வெள்ளைப் பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, சிலோன் பசலை போன்றவைகள் உள்ளன. பசலைக் கீரையை சாப்பிடுவதால் தலைமுடி நகம் பற்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

100 கிராம் பசலைக் கீரையில்

  • கலோரி – 79 கிராம்
  • கார்போஹைட்ரேட் – 3.4 கிராம்,
  • கொழுப்பு – 0.3 கிராம்,
  • புரதம் – 1.8 கிராம்,
  • தயாமின் – 0.05 mg,
  • ரிபோஃப்ளேவின் – 0.155 mg,
  • நியாசின் – 0.5 mg,
  • வைட்டமின் பி 6 – 0.24 mg,
  • கால்சியம் – 109 mg
  • இரும்பு – 1.2 mg,
  • மக்னீசியம் – 65 mg,
  • மாங்கனீசு – 0.735 mg,
  • பாஸ்பரஸ் – 52 mg,
  • பொட்டாசியம் – 510 mg,
  • துத்தநாகம் – 0.43 mg
  • மேலும், வைட்டமின் ஏ, ஈ, ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது.

பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தியை புதுப்பிக்கிறது. பார்வையை கூர்மை படுத்துகிறது. பசலைக் கீரை ஜீரண மண்டலத்திற்கு நல்லது.

100 கிராம் ஆட்டுக்கறி, கோழி கறி, மீன், முட்டை போன்றவற்றில் கிடைக்கும் புரதத்தை விட அதிக அளவு தரமான புரதம் பசலைக்கீரையில் மூலம் குறைந்த செலவில் கிடைக்கிறது.

பசலைக்கீரையை சூப், பொரியல், அவியல், பச்சடி என்றும் தயாரித்து சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆஸ்துமா பெண்கள் பருக்கள் முதலியவற்றையும் பசலைக்கீரையில் உள்ள வைட்டமின் ஏ குணமாக்கும்.

பசலைக் கீரையை சமைக்கும்போது கீரையின் அளவைவிட பருப்பின் அளவு சற்று குறைவாகவே இருக்க வேண்டும். இவ்வாறு பருப்பு சேர்த்துச் சாப்பிடுவதால் உடல் வெப்பம் தணிந்து நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு நீங்கும். ஆசன வாயில் ஏற்படக்கூடிய புண், கடுப்பு, எரிச்சல் போன்றவை குணமாகும்.

அனைத்து வயதினரும் பசலைக்கீரைக்கு முக்கியத்துவம் கொடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஊட்டச்சத்துடன் உடலுக்கு குளிர்ச்சியை தரும் இக்கீரையை அனைவரும் சாப்பிடலாம்.

பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் பைட்டோ நிட்ரி யண்ட்டுகள் மற்றும் புரோஸ்டேட் சத்துக்கள் இருக்கிறது. இது, புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.

பசலைக்கீரையில் லுடின் இருப்பதால், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களை பாதுகாக்கும். பசலைக்கீரையில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருப்பதால், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருப்பவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி உணவோடு எடுத்தக் கொண்டால் அந்ந வலியினை குணப்படுத்தும். பசலைக்கீரையின் தண்டினை சாறு எடுத்து கற்கண்டுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்கு ஜீரணமாவேதோடு சளி, நீர்க்கோவை போன்றவை சரியாகும்.

பசலைக்கீரையில் மக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.

Recent Post

RELATED POST