முட்டைகோஸ் மருத்துவ பயன்கள்

முட்டை கோஸ் கீரை வகையை சேர்ந்த ஒரு உணவாகும். இதில் வைட்டமின் ஏ, உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் ஆகியவை உள்ளது. இதை பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டை கோஸ் உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கண்பார்வை

முட்டை கோஸில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை கோளாறுகளை சரி செய்யும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

முட்டைகோஸ் ஜுஸில் உள்ள நன்மைகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முட்டைகோஸ் ஜூஸ் நல்ல பலனை தரும். இதில் குறைவான கலோரியே உள்ளதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். மேலும் வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனை வராமல் தடுக்கும்.

(குறிப்பு:- கீழே கூறப்பட்டுள்ள நன்மைகள் அனைத்தும், வெறும் வயிற்றில், முட்டைக் கோஸ் குடித்தால் மட்டுமே)

முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், என்ற மூலக்கூறு, புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களை எதிர்ப்பதற்கு பெரும் உதவியாக உள்ளது.

முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டைக் கோஸ் ஜுஸ், அல்சர் பிரச்சனையை விரைவில் குணப்படுத்துமாம். அதாவது, அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், வெறும் வயிற்றில், முட்டைக்கோஸ் ஜுஸை குடித்தால், அது வயிற்றில் உள்ள அல்சர் பாக்டீரியாக்களை அழித்துவிடுமாம்.

எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகவில்லை என்று கூறுபவர்கள், முட்டைக்கோஸ் ஜுஸை பருகி வந்தால், அந்த பிரச்சனை விரைவில் சரியாகும். இதனால் தான், ஃபாஸ்ட் புட்-களில் கூட இந்த முட்டைக்கோஸை பெருமளவு பயன்படுத்துகின்றனர்.

முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.

கேன்சர் செல்கள்

முட்டைகோஸில் உள்ள சல்ஃப்போரபேன் என்ற சத்து உடலில் கேன்சர் செல்கள் வளரவிடாமல் தடுக்கும். நுரையீரல் மற்றும் வயிற்றை புற்று நோயிலிருந்து பாதுகாக்கும்.

சரும ஆரோக்கியம்

முட்டைகோஸில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் சருமத்தில் ஏற்படக்கூடிய பரு, கரும்புள்ளிகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தலை முடி வளர்ச்சி

முட்டைகோஸ் தண்ணீரில் சல்ஃபர் இருக்கும். எனவே முட்டைகோஸ் வேக வைத்த தண்ணீரில் உங்கள் கூந்தலை அலசுவதால் அது தலைமுடிக்கு நல்ல பலனை கொடுக்கிறது.

செரிமான கோளாறு

முட்டைகோஸில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

Recent Post

RELATED POST