ஏராளமான சத்துக்களையும் நோய் எதிர்ப்பு பொருள்களையும் கொண்டுள்ளது இந்த செர்ரி பழம். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டது. இவை இரண்டுமே உடலுக்கு நல்லது. இப்பழத்தின் அறிவியில் பெயர் புருனஸ் அவியம். இவை அதிகமாக குளிர்ந்த பிரதேசங்களில் விளைகின்றது.
இதில் இருக்கும் வைட்டமின் பி3 என்ற நியாசின் சத்து தோலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. கொழுப்பை கரைக்கிறது. 100 கிராம் செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் பி5 எனும் பெரிடாக்சின் சத்து நரம்பு மண்டலத்தையும், மூளையையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
பீட்டா கரோட்டின் இளைமையை புதுப்பித்து ஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்கிறது. போலிக் அமிலம் ரத்தசோகையை தடுக்கிறது. இப்பழத்தில் இருக்கும் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு மண்டலத்தில் உறுதியாக பாதுகாக்கிறது.
செலினியம், குயிர் சிட்டின், ஃபிளாவோனாயிட்ஸ், எல்லசிக் அமிலம், நார் சத்து, மாவு சத்து போன்ற சத்துக்கள் உடலின் இளமையை பாதுகாக்கும். தினமும் மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும் உடலுக்கு போதுமான வைட்டமின் சி சத்து கிடைத்துவிடும்.
நரம்புகளைப் பாதுகாக்கிறது
நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது. இது நரம்புகளில் உண்டான இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு
செர்ரி பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி எடுத்துக் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, எந்த ஒரு நோயும் உடலை தாக்காதவாறு ஒரு அரணாக பாதுகாத்து இருக்கும்.
கண்களுக்கு
செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது கண்களுக்கு நல்லது.
தலைமுடி ஆரோக்கியம்
பலருக்கு தலைமுடி கொட்டுதல், பொடுகுத்தொல்லை, தலைமுடி ஈரப்பதம் இல்லாமல் போன்ற பல பிரச்சனைகளால் தலைமுடி உதிர்ந்து விடுகிறது. இதற்கு செர்ரி பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதில் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
மலச்சிக்கலை போக்கும்
இப்பழத்தில் உணவினை செரிக்க உதவும் சத்துகள் அதிகமாக இருக்கிறது. செர்ரி பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்தால் குணமாகும். உணவு நன்றாக சீரணித்து குடல்களில் இருக்கும் கிருமிகளை சுத்தப்படுத்தி, குடலை பாதுகாக்கிறது.
உடல் எடையை குறைக்க
உடல் அதிகமாக குறைக்க விரும்புகிறவர்கள் செர்ரி பழத்தினை அதிகமாக எடுத்துக்கு கொண்டால் பசியுணர்வை கட்டுபடுத்தி, உடலுக்கு தேவையான சத்தை கொடுத்து எடையை குறைக்க உதவுகிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெண்மையான முகம், இளமையான சருமத்தை கொடுக்கிறது.