சாத்துக்குடி பழத்தில் வைட்டமின் சி, இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து ஆகியவை உள்ளது. சாத்துக்குடி ஜூஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சாத்துக்குடி பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. சாத்துக்குடி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் உடலை தாக்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும்.
வெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சி தரும் பழமாக சாத்துக்குடி விளங்குகிறது. இதனை ஆங்கிலத்தில் “ஸ்வீட் லெமன்” என்று அழைக்கப்படுகிறது.
சாத்துக்குடி பழம் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதற்கு சாத்துக்குடி பழம் பெரிதும் உதவுகின்றது. மேலும் கல்லீரல் சீராக செயல்பட உதவுகிறது.
தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வந்தால் உடலில் புதிய ரத்தம் உருவாகும். இதனால்தான் நோயுற்றவர்களுக்கு சாத்துக்குடி ஜூஸ் வழங்கப்படுகிறது.
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி பழம் சீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டிவிடும்.
சாத்துக்குடி பழத்தை கோடைக்காலத்தில் சாப்பிடும்போது தாகம் தணிந்து உடலுக்கு புத்துணர்வு தரும்.
சாத்துக்குடியில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரக பையில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகத் தொற்று நோய் உருவாகாமல் தடுக்கும்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தை சாப்பிடும்போது எளிதில் செரிமானம் ஆகும். மேலும் மஞ்சள் காமாலை நோயால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் வாந்தியை குணப்படுத்தும்.
ரத்தசோகை உள்ளவர்கள் தினமும் சாத்துக்குடி ஜூஸ் அருந்தலாம். சாத்துக்குடி பழத்தை தினமும் உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.