தீ எச்சரிக்கும் கருவி எவ்வாறு இயங்குகிறது?

தீ எச்சரிக்கும் கருவியில் ஒரு இரும்புச்சட்டம் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் மின் இணைப்பால் ஆன பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல்பகுதி அதனைத் தொடரும் வண்ணம் ஒரு மினசார மணியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மின்சார மணியின் ஒரு பக்கமும், திருகாணியின் மறுபக்கமும் பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சட்டம் திருகாணியைத் தொடாத வண்ணம் அமைந்திருக்கும். தீ ஏற்பட்டால் அதனால் ஏற்பட்ட வெப்பம் தாக்கியவுடன் இணைப்புச் சட்டமானது முன் நோக்கி வளைந்து திருகாணியைத் தொடும்.

இணைப்புச் சட்டம் திருகாணியைத் தொட்டவுடன் மின்சாரமணி ஒலிக்கும். எச்சரிக்கை மணி ஒலித்ததும் உடனே தீ பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில இடங்களில் உள்ள தீ எச்சரிக்கும் கருவியில் உள்ள மணி அடித்தவுடன் அக்கருவி தானாகவே கார்பன் டை ஆக்ஸைடையோ அல்லது நீரையோ நேரடியாகச் செலுத்தி தீயை அணைத்து விடுகிறது.

Recent Post

RELATED POST