குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், விட்டமின்கள் ஆகியவை குழந்தைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.
பசும் பாலில் போதிய அளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கால்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் குழந்தைகளின் தசைக் கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.
பசும் பாலில் விட்டமின் ஏ, விட்டமின் டி ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்ற ஆபத்துகளை இது குறைக்கிறது.
குழந்தைகள் வளரும் வயதில், அவர்களுக்கு புரதம் அவசியம். பசும்பால் மூலமாக நீங்கள் அவர்களுக்கு இதை வழங்கலாம். அது மட்டுமல்லாமல் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது.