உடல் சூட்டை தணிப்பதற்க்கு இயற்கை அதிக வளங்களை நமக்கு கொடுத்துள்ளது. அதில் சிலவற்றை உடல் சூட்டை தணிப்பதற்கு பயன்படுபவையை பார்ப்போம். இங்கு குறிப்பிட்டவைகளை அனைத்தையும் ஒரே நாளில் எடுக்காமல் தினம் ஒன்று என்ற விதம் எடுத்தால் உடலுக்கு நிரந்தர ஆரோக்கியத்தை கொடுக்கும்.
- தினமும் காலை உணவுக்குப்பின் இளநீர் அருந்த வேண்டும்
- வாழைப்பழம், வெள்ளரி பிஞ்சு அடிக்கடி சாப்பிட வேண்டும்
- கரும்புச்சாறு, பழச்சாறு சாப்பிட வேண்டும்
- வெந்தயம் ஊறவைத்து அதில் ஒரு டீஸ்பூன் சாப்பிட வேண்டும்
- தர்பூசணி பழம் சாப்பிட வேண்டும்
- கிர்ணிப்பழம் சாப்பிட வேண்டும்
- மோருடன் புதினா சாறு கலந்து சாப்பிட வேண்டும்
- உணவில் முள்ளங்கி சேர்த்து கொள்ள வேண்டும்
- வெறும் வயிற்றில் பால், தேன் கலந்து குடிக்க வேண்டும்
- துளசி இலை, விதையை நீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும்.
- தனியா, சீரகம், சோம்பு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும்
- கொழுப்பு நீக்கிய தயிரை தினமும் சாப்பிடலாம்
- எலுமிச்சை சாறு, நெல்லிச்சாறு குடிக்க வேண்டும்
- ஆப்பிள் பழம் சாப்பிடுவதும் உடல் சூட்டை தணிக்கும்
- மோர் குடிப்பதும் சூட்டை நன்கு தணிக்கும்
- இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.
- பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.