எலி ஜூரம் நோயின் அறிகுறியும் அதன் பாதுகாப்பு முறையும்

எலி ஜூரம் என்பது நம் ஊரில் செல்லும் பெயர், ஆனால் மருத்துவ உலகில் இது மென் சுருளி நோய் என்று பெயர்.

எப்படி பரவுகிறது 

தொற்று கொண்ட விலங்குகளின் சிறுநீரிலிருந்து மென்சுருளிக் கிருமிகள் அதிகம் வெளியேறுகிறது, மழை நீரில் நாம் நடந்து செல்லும் போது, நமது உடலில்  உள்ள காயங்கள் மூலமாக, குறிப்பாக காலில் உள்ள காயங்கள் மூலம் இவை நம் உடலில் சென்று விடுகின்றன.

ஆடு, மாடு இறைச்சி வெட்டுபவர்கள், கால்நடை மருத்துவர்கள், பாதாள சாக்கடை ஊழியர்கள், கழிவு நீர் சுத்தம் செய்வோர் இவர்கள்தான் இக்கிருமியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறியும் விளைவும்

“எல்கேனிகோலா” என்ற நோய் நாய்கள் மற்றும் பன்றிகளிடமிருந்து பரவுகிறது.

நுண்கிருமிகள் உடலில் சென்று 4 முதல் 21 நாட்கள் வரை பிரச்சனை இல்லாமல் இருக்கும். ஆனால் பெரும்பாலும் 10 நாட்களிலேயே நோயின் அறிகுறிகள் தெரியும். பெருபாலானவை எவ்வித பாதிப்பும் இல்லாமல் தானாகவே சரியாகி விடும்.

சிலருக்கு லேசான காய்ச்சல் வரும், ஆனால் சிலருக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, தாங்க முடியாத தசைவலி, கண்கள் சிவப்பது, பசியின்மை மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் மூலம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

சிகிச்சை 

காய்ச்சல் வந்தவர்கள் அனைவரும் ஏதேனும் நுண்ணுயிர் கொல்லி எடுத்து கொள்வதால் முற்றிலும் இது குணமடைந்துவிடும்.

நோயின் கடுமை குறைவாக உள்ளவர்கள் டாக்சிசைக்ளின் (Doxycycline) மாத்திரைகள் உட்கொண்டால் போதும். நோய் சற்று கடுமையாக இருப்பவர்கள் மருத்துவமனையில் தங்கி பெனிசிலின் (Penicillin) மருந்துகளை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை ஊசி மூலம் பெற வேண்டும்.

தடுப்பு முறைகள் 

சமையலறை, வாஷ்பேசன் போன்ற இடங்களில் உணவு பண்டங்கள் சிதறி கிடக்காமல் பார்த்து கொள்ளுங்கள். மிச்ச மீதி உணவு பொருள்களை வெளியில் கொட்ட வேண்டாம் ஏனென்றால் இங்கு உணவு கிடைக்கும் என்று எலிகள் அறிந்தால் அனைத்தும் அவ்விடத்திற்கு இடம் பெயர்த் தொடங்கிவிடும். சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்தாலே பாதி நோய்கள் வாரது.

Recent Post

RELATED POST