Fistula Meaning in Tamil : மூலநோயை போல அதிகத் தொல்லைத் தருவது பவுத்திரம் எனப்படுகிற ஆசன வாய் புரபை்புண் ஆகும். மூலத்தைப் பற்றி தெரிந்த அளவு பிஸ்டுலா அல்லது புரைப்புண் என்கிற பவுத்திரம் பற்றியோ, பிஸ்ஸர் என்கிற ஆசனவாய் வெடிப்பு பற்றியோ பலருக்கு தெரிவதில்லை.
மலத்துவாரத்தில் வரும் பிரச்சனைகள் எல்லாமே மூலமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள்.
பவுத்திரம் என்பதை ஏதோ பெரிய பால்வினை நோயால் வந்த பாதிப்பு என நினைத்துக்கொள்கிறார்கள். போலி மருத்துவ நிபுனர்கள் இதையே சாக்காக வைத்து பெரிய அளவில் பொது மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள்.
பால்வினை நோய் என்ற பயத்தில் வெளியே சொல்லாமல் இதை மறைத்து விடுவதால் பாதிப்பு அதிகமாகி கடைசிக்கட்டத்தில் நிறைய உபாதைகளை அனுபவித்து, செலவு செய்து சோர்ந்த நேரத்தில் டாக்டரை நாடுகிறார்கள்.
அறியப்படாமல் பயத்தை உண்டாக்குகிற இந்த நோயை பற்றியும் தெரிந்துகொள்வது வழிப்புனர்வுக்கு உகந்ததாகும்.
பவுத்திரம் ஆசனவாய்ப்புரைப்புண் என்பது மலக் குடலுக்கும், ஆசனவாய்க்கும் வெளியேயுள்ள தோலுக்கும் இடையே ஏற்படுகிற பொத்தல் அல்லது துளையே ஆகும்.
பவுத்திரம் என்பது சமஸ் கிருதச்சொல்லாகும். பவுத் என்றால் துளை என்று பொருள். புரையோடி (செப்டிக் ஆகி), துளை உண்டாவதால் இந்த நோயை பவுத்திரம் என்கிறார்கள். இந்த நோய் எப்படி உண்டாகிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.