நெருப்புக்கோழி பற்றிய தகவல்கள்

Neruppu Kozhi in Tamil : நெருப்புக்கோழி பறவை இனங்களில் மிகப்பெரிய மற்றும் மிக அதிக எடை கொண்டவையாகும். உலகமெங்கும் சுமார் 20 லட்சம் நெருப்புக்கோழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளன.

நெருப்புக்கோழிகள் கூட்டமாக வாழும். ஒரு கூட்டத்தில் 10 முதல் 50 பறவைகள் இருக்கும். இந்த நெருப்புக்கோழி ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வாழ்கிறது. நெருப்புக்கோழியால் பறக்க முடியாது.

நெருப்புக்கோழி உலகத்திலேயே மிக வேகமாக ஓடக்கூடிய பறவை. நெருப்புக்கோழி மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து 45 நிமிடங்கள் வரை ஓடக்கூடியது.

ஒரு நெருப்புக்கோழியின் எடை 63 கிலோ முதல் 143 கிலோ வரை இருக்கும். ஆண் நெருப்புக்கோழி கருப்பு நிறத்திலும் பெண் நெருப்புக்கோழி பழுப்பு நிறத்திலும் இருக்கும்.

நெருப்புக்கோழிகளின் கால்களில் 2 விரல்கள் உள்ளது. அதில் ஒரு விரலில் மட்டுமே நகம் உள்ளது. பழங்கள், கொட்டைகள், பூச்சிகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடும். நெருப்புக்கோழிகள் தண்ணீர் குடிப்பதில்லை.

நெருப்புக்கோழி அதிகபட்சமாக 9 அடி உயரம் வளரும். 45 ஆண்டுகள் வரை உயிர்வாழும். பண்டைய எகிப்து நாட்டில் நெருப்புக் கோழிகள் சாரட் வண்டிகளை இழுப்பதற்காக பயன்படுத்தப்பட்டன.

ஆப்பிரிக்கா, கென்யா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் நெருப்புக்கோழிகளுக்கான ஓட்டப் பந்தயமும், சவாரிப் போட்டியும் நடைபெறுகிறது.

டைனோசர் காலத்திலிருந்தே காணப்படும் நெருப்புக்கோழி இன்று வரையிலும் இருப்பது அதிசயமே.

Recent Post

RELATED POST