கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்

கோரை என்னும் ஒருவகைப் புல்லிலிருந்து பெறப்படுவது கோரைக்கிழங்கு. இதன் மற்றொரு பெயர் வராகபட்சணி என்பதாகும்.

கோரைக்கிழங்கு, மூங்கில் இலை, பாதிரி வேர், திரிபலா இவற்றை சம அளவு எடுத்து, 800 மில்லியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர மேகநோய் குணமாகும்.

கோரைக் கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து, அதனுடன் 3 மடங்கு ஆவாரைப் பொடி சேர்த்து தினமும் தேய்த்துக் குளித்து வர உடலில் ஏற்படுகின்ற கற்றாழை நாற்றம் நீங்கும்.

கோரைக்கிழங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி, பேரரத்தை, செஞ்சந்தனம் – இவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர, 2 – 3 நாட்களில் சுரத்துடன் கூடிய வாத நோய் குணமாகும்.

கோரைக்கிழங்கு, விஷ்ணுகிரந்தி, மிளகு ஆகிய வற்றை சம அளவு எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி, அதில் 200 மில்லி அளவு சாப்பிட்டு வர நீர்த்தாரையில் வலியுடன் சுக்கிலம் விழுதல் குணமாகும்.

கோரைக்கிழங்குடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட உடலில் உள்ள பூச்சிகளை அழிக்கும். சீதக்கழிச்சல் குணமாக்கும்.

கோரைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பிரண்டை, வாழைத்தண்டு, கடுகு, சுக்கு, சீந்தில், பறங்கிப்பட்டை கடுக்காய் – இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி, ஒரு சிட்டிகை அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் மட்டும் குடித்து வர ரத்த மூலம், மூளை ஆகியவை குணமாகும்.

கோரைக்கிழங்கை பொடி செய்து ஒரு கிராம் அளவு காலை மாலை இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நல்ல நினைவுத்திறன் உண்டாகும். இது காசநோயையும் குணமாக்கும்.

பச்சைக் கோரைக்கிழங்கை அரைத்து பாலூட்டும் தாயின் மார்பில் பூசிவர பால் அதிகம் சுரக்கும். கோரைப் பாயில் படுத்துத் தூங்க பசி மந்தம், சுரம் ஆகியவை குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியும், நல்ல உறக்கமும் உண்டாகும்.

கோரைக்கிழங்கு. மாம்பட்டை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து, அதில் அதிவிடயம், இலவம் பிசின் ஆகியவற்றைப் பொடி செய்து கலந்து குடித்து வர அதிக காய்ச்சல் உடன் கூடிய சுரத்தை குணமாகும்.

கோரைக்கிழங்கு, சுக்கு, வசம்பு, இலை கள்ளி வேர் இவை நான்கையும் குடிநீர் செய்து குடித்து வர கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களால் ஏற்படுகின்ற நஞ்சுத் தன்மையைப் போக்கும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்பாலை அரிசி வெட்பாலை பட்டை, அதிமதுரம், மஞ்சள் – இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர் செய்து குடித்து வர மந்தம் தீரும்.

Recent Post

RELATED POST