முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்

ஆரஞ்சு பழம் உடலுக்கு பலவகையான நன்மைகளை தருகிறது. இந்த பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. பழத்தைக் காட்டிலும் தோலில்தான் விட்டமின் சி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே ஆரஞ்சு பழ தோலை வேஸ்ட் செய்யாமல் இப்படி அழகுப் பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.

ஆரஞ்சு தோல் பொடி எப்படி செய்ய வேண்டும்?

ஆரஞ்சு பழ தோலை அதன் ஈரப்பதம் போகும் வரை வெயிலில் அல்லது வீட்டிலேயே காய வைக்க வேண்டும். பிறகு அதனை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு எடுத்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆரஞ்சு தோல் பொடி நன்மைகள்

ஆரஞ்சு பழ தோலுக்கு முகத்தை இளமையுடன் வைத்துக்கொள்ளும் சக்தி உள்ளது. முகப்பரு, கீரல், பரு தடையங்கள், திட்டுக்கள் நீக்கிவிடும்.

எப்படி பயன்படுத்துவது?

இரண்டு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பில் சிடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.

இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடி சேர்த்து பேஸ்டாக கலந்துகொண்டு முகத்தில் அப்ளை செய்யுங்கள். சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்.

ஆரஞ்சு தோல் பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து அப்ளை செய்யுங்கள்.

Recent Post

RELATED POST