உலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றியுள்ளது. லட்சக்கணக்கான பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போல் பல மடங்கு ஆபத்தான தொற்று நோய்களையும் உலகம் சந்தித்துள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

பெரியம்மை : இந்த தொற்று நோய் 1492-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பரவியது. இந்த தொற்று நோய் சுமார் 30% நோயாளிகளை கொன்றுள்ளது. 20 மில்லியன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது.

காலரா : இது இந்தியாவில் ஏற்பட்ட முதல் தொற்றுநோய். 1817ல் ஆரம்பித்த இந்த நோய் 1823 வரை நீடித்தது. இது உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது.

சார்ஸ் (SARS) : இந்த நோய் 2003-ஆம் ஆண்டு சீனாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. சுவாச நோய்க்குறி எனப்படும் இந்த நோய் வெளவால் மற்றும் பூனைகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது. சுமார் 8,096 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எபோலா : 2014-இல் பரவ தொடங்கிய இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவியது. இது 28,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா (COVID19) : கொரோனா வைரஸ் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி அன்று சீனாவின் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உலகளவில் 163-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதுவரை இந்த நோய்க்கு சரியான தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. இது உலகப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் உருவாகும் ஒவ்வொரு தொற்றுநோயும் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை உருவாக்கி மக்களின் அன்றாட வாழ்க்கையும் மாற்றி விடுகிறது.

Recent Post

RELATED POST