நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவருடைய முழு பெயர் Joseph Robinette Biden.
ஜோ பைடன் நவம்பர் 20, 1942 ம் ஆண்டு பென்சில்வேனியாவில் பிறந்தார். சிராகஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்ற பைடன் 1969ல் ஒரு வழக்கறிஞரானார்.
1972 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் அமெரிக்காவின் ஆறாவது இளைய மேலவை உறுப்பினரானார். பிறகு மேலவையின் வெளியுறவுக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
1987 முதல் 1995 வரை மேலவையின் நீதித்துறைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். குடிமக்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் சட்டம் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளுக்கும் பைடன் தலைமை தாங்கினார்.
2008 ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவுடன் துணை அதிபராக பதவியேற்றார். அதன் பிறகு ஒபாமாவும் பிடெனும் 2012 அதிபர் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2016 தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிடப்போவதில்லை என்று பைடன் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்காவின் 46 வது அதிபராக வெற்றி பெற்றார்.