பொங்கல் தமிழர்களின் பண்டிகை. ஆனால் இலங்கை, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இலங்கையில் பொங்கலுக்கு மறுநாள் பிள்ளையார் பொங்கல் எனக் கொண்டாடப்படுகிறது.
கனடா, அமெரிக்காவில் ‘தாங்க்ஸ் கில்லிங்டே’ என்ற பெயரில், இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஜப்பான் நாட்டில் ‘குதிரைக்குப் பொங்கல்’ வைத்து அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
கிரேக்க நாட்டில் ஸ்மோஸ் போரியா என்ற பெயரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
ஆப்பிரிக்க மக்கள் ‘கவான்ஸ்கர்’ என்ற பெயரில் பொங்கல் விழா கொண்டாடுகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்காவில் ஹோமோவா திருவிழா என்றும் முதல் பழங்கள் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது.
இஸ்ரேலியர்கள் ‘சுக்கோத்’ என்ற பெயரில் ஏழு நாட்கள் பொங்கல் திருவிழா கொண்டாடுகின்றனர்.
‘மசா சூகெட்ஸ்’ பகுதியில் கிரான் பெரி ஹார்வெஸ்ட் பெஸ்டிவெல் என்ற பெயரில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
‘கங்கா சாகர் மேளா’ என்ற பெயரில் மேற்கு வங்காளத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அசாம், மணிப்பூரில் போகாலி பிகு’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாக கொண்டாடப் படுகிறது காஷ்மீரில் “கிச்சரி அமாவாசை’ என்ற பெயரில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
`லோரித் திருநாள்’ என்ற பெயரில் பஞ்சாபியில் யாகங்கள் நடத்தி, பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது.
வட நாட்டில் போகிப்பண்டிகை போல், தீயில் அவல், இனிப்பு, பொரி இவைகளைப் போட்டு பொங்கல் விழாக் கொண்டாடப்படுகிறது.
மராட்டிய மாநிலத்தில் போகி, சங்கராந்தி, கிங்கராந்தி என மூன்று நாட்கள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. குஜராத்தில் புனித விழாவாகக் கொண்டாடுவர். அன்று பட்டம் விட்டு மகிழ்வர்.