இரவு நேரத்தில் நமது உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதால் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.இரவு நேரங்களில் எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிடுவது நல்லது.
இரவு நேரத்தில் ஹெவியான உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
இரவு நேரத்தில் உணவுகளை தாமதமாக சாப்பிட்டாலோ அல்லது வயிறு நிறைய சாப்பிட்டாலோ அது மறுநாள் காலையில் பசியின்மைக்கு வழிவகுக்கும். இதனால் காலை உணவை தவிர்க்க நேரிடும். காலை உணவை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் கெட ஆரம்பிக்கிறது.
இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் அது சரியாக ஜீரணம் ஆகாமல் போய்விடுகிறது. இதனால் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது.
தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீர்குலைந்து போய்விடும். பிறகு குடல் அலர்ஜி, இரைப்பை புண், இரப்பை அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.
மாலை 6 மணிக்கு மேல் கலோரி அதிகமான உணவுகளை சாப்பிடுவதால் அது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மறுநாள் காலையில் உங்களுக்கு சோர்வை உருவாக்கும். எனவே இரவு நேரங்களில் பிரியாணி, பரோட்டா, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
இட்லி, இடியாப்பம், தோசை போன்ற எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை இரவு நேரங்களில் சாப்பிடுவது நல்லது.