என்ன தான் விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் செய்து பார்த்தும், சந்தானம் போன்று காமெடிகள் பல வீசிப் பார்த்தும், ஒரு பெண்ணும் மயங்கவில்லையா..? உங்களைப் போன்ற இளைஞர்களுக்காகவே, அசத்தலான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், பெண்கள் எந்த மாதிரியான விஷயங்களுக்கு கவரப்படுகிறார்கள் என்பது பற்றி தெளிவாக பேசப்பட்டுள்ளது. அது பற்றி தற்போது பார்க்கலாம்.
பெண்களை எது கவர்கிறது என்ற ஆய்வு..?
பர்சனாலிட்டி மற்றும் சோசியல் சைக்காலஜி என்ற இதழில் பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் எந்த மாதிரியான நிறத்தில் ஆடைகளை அணிந்தால், பெண்களுக்கு பிடிக்கும் என்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது. எந்த நிற ஆடைகள் என்பது பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
ஆடை நிறம்:-பெண்கள் பொதுவாக சிவப்பு நிற ஆடைகளை அதிகமாக அணியும் ஆண்களை விரும்புகின்றனர். அது அதிக வசீகர தன்மையை ஆண்களுக்கு தருவதாக பெண்கள் நினைக்கின்றனர்.
சிவப்பு நிற பேக் கிரவுண்டை கொண்ட புகைப்படத்தில் ஆண்கள் இருக்கும் போது மிகவும் அழகாக தெரிவதாக பெண்கள் உணர்கிறார்கள். இதனால், காதலிக்க பெண் தேடும் ஆண்களே, உங்களது சமூக வலைதளப் பக்கத்தில் உங்களது புகைப்படங்களை, சிவப்பு நிற பேக் கிரவுண்ட் கொண்டதாகவே வைத்துக் கொள்ளுங்கள்.
சிவப்பு நிற ஆடையை அணியும் ஆண்கள், எவ்வளவு வறுமையில் இருப்பவர்களாக இருந்தாலும், ரிச் லுக்கில் தான் தென்படுகிறார்களாம்.
பொதுவாக பெண்களை பார்த்தால் தான் ஆண்கள் பாய்ந்துவிடுவார்கள். ஆனால், ஆண்களை சிவப்பு நிற உடையில் பார்த்துவிட்டால், பெண்களே பாய்ந்து விடுவார்கள் போல என்று இந்த ஆய்வை நடத்திய பேராசிரியர் எலியட் தெரிவித்துள்ளார். ஆக, நீங்கள் காதலிக்க விரும்பும் பெண்கள் முன்பு, காதலித்துக் கொண்டிருக்கும் பெண்கள் முன்பு, பெண் பார்க்க செல்லும் போது, சிவப்பு நிற ஆடைகளை அணிந்து சொல்லுங்கள். மறந்துவிடாதீர்கள்…