பல்லின் வெளிப்புறம் பாறை போல் இருப்பினும் உட்புறம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகிறது. ஆரோக்கியமான பற்கள் மேற்கூறிய உணர்விற்கு ஆளாகாது. ஆனால் சேதமடைந்த பற்கள் மேலும் பாதிக்கப்படுகின்றன. அது பல் ஆரோக்கியத்தில் உடனடியாகக் கவனம் தேவை என்று எச்சரிக்கிறது.
நான்கில் ஒருவருக்கு இத்தகைய அதீத வலி ஏற்படுகிறது. எனினும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. முன் பற்களும், கடைவாய்ப் பற்களும் அதிக பாதிப்பை அடைகின்றன. இத்தகைய பாதிப்புக்கு உள்ளானோர் மித மான வெப்பத்தில் குளிர்பானங்களையும், ஐஸ்க்ரீம்களையும் உண்பர். 20 முதல் 40 வயது வரை உள்ளோர் இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட பிறகு உடனே பல் டாக்டரை பார்ப்பதே அவர்களுக்கும் பல்லுக்கும் நல்லது.
பல் தேய்க்கும் சரியான முறை:
மலிவான பல் துலக்கிகளைத் தவிர்ப்பது போன்றவை நன்மை பயக்கும் வெற்றிலை, குட்கா, பாக்கு போன்றவை எளிதில் உடையும் தன்மையுள்ள பற்களின் வெளிப்பாகத்தை அரிக்கின்றன. சாக்லேட் மற்றும் இனிப்புகள், மேலும் தீங்கு விளை விக்கின்றன. நவீன பல் மருத்துவத்தில் தேர்ந்த அமெரிக்காவிலும்கூட 20 முதல் 30 சதவீத இளைஞர்கள் இவ்வித அதீத வலியினால் பாதிக்கப்படுகிறார்கள்.
பற்களின் உள் அமைப்பும், ஈறுகளின் சேர்க்கையும் பற்றிய விபரங்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. பாதிக்கப்பட்ட பற்களை சரியாகத் துலக்காமல் இருப்பது அவற்றை சிதைவடையச் செய்யும். பல்லில் அதிக வலி தோன்றும் சமயம் கட்டாயமாக பல் மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும். பல் மருத்துவர் அதைச் சரியாகக் கண்டறிந்து நவீன மருத்துவ வசதிகளான “இன்ஃப்ராரெட் தெர்மா மீட்டரைப் பயன்படுத்தி சிகிச்சை கொடுப்பார்.
பல்லின் அதீத உணர்ச்சி என்பது மருத்துவர்களாலேயே முழுவதும் புரிந்து கொள்ள இயலாதது. மருத்துவரிடம் செல்லும் நேரம் வலி இல்லாவிடினும் அதனால் எப்போதெல்லாம் தோன்றுகிறது என்பதைக் கூறவேண்டும். தவறினால் பல் வலிக்காரர் பிளாக்’ மற்றும் பெரிடோன்டல்’ நோய்களுக்கும் ஆளாக நேரிடும்.
பற்களின் சில பகுதிகள் வெளிக்கொணரப்படுவதால் அவை அத்தகைய வலிக்கு ஆளாக்கப்படுகின்றன. ரசாயன மற்றும் குளிர் தட்பவெப்ப நிலைகளிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.