சென்னிமலை முருகன் கோவில் வரலாறு

இந்த கோவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் கந்தசஷ்டி கவச பாடல் அரங்கேற்றம் செய்யப்பட்ட தலமாகும்.

சென்னிமலை என்றால் தலையாய மலை என்று பொருள். இதற்கு சிகரகிரி, சிரகிரி, புட்பகிரி சென்னியங்கிரி என்னும் வேறு பெயர்களும் உண்டு .

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டம் சென்னி மலையில் அமைந்துள்ளது
சென்னிமலை முருகன் கோயில். இத்திருக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடி – கொடிகளாலும் சூழப் பட்டுள்ள அழகிய மலையில் அமைந்துள்ளது.

சென்னிமலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டுச் செல்கின்றார்கள்.

செவ்வாய்க்கிழமைதோறும் இரவு மணிக்கு வேங்கை மரத் தேர் பவனி நடை பெறுகிறது. ஆடி, தை அமாவாசைகளில் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு மாதம் வரும் வளர்பிறை சஷ்டித் திருநாளிலும், கந்தர் சஷ்டி திருவிழா நாட்களிலும் எண்ணற்ற முருக பக்தர்கள் விரதமிருந்து முருகனை வணங்கி வருகின்றனர்.

பவுர்ணமி நாட்களில் இரவு 6 மணிக்கு கிரிவலம் நடக்கிறது. 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள மலையை பக்தர்கள் வலம் வருகிறார்கள். கிரிவலம் வர சுமார் 5 மணி நேரம் ஆகிறது. கடந்த ஆண்டுகளாக கிரிவலம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து வருகிறார்கள்.

வள்ளி-தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி-சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம்.

இங்கு முருகப்பெருமானுக்கு பால், தயிர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படும் தயிர், புளிப்பதில்லை என்பதே இந்த ஆலயத்தின் அதிசய நிகழ்வாகும்.

Recent Post

RELATED POST