பல நபர்களால் அறியப்படாத கீரைகளில் ஒன்று தான் பரட்டை கீரை. இக்கீரையின் மருத்துவ குணத்தை பற்றி தான் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்..
பரட்டை கீரையின் நன்மைகள்
இரத்தம் அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, வயிற்று புண்கள், சிறுநீரகம் பிரச்சனை, எலும்பு பிரச்சனை, நீரிழிவு நோய், உடல் குறைப்பு, இதய பிரச்சனை, சரும பிரச்சனை.
இரத்தம் அழுத்தம்
ஒருவருக்கொருவர் வயதுக்கு ஏற்றார் போல் ரத்தம் அழுத்தம் மாறுபடுகிறது. ரத்தம் அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு சாப்பிட வேண்டும். பல பேருக்கு உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உணவில் பரட்டை கீரை சாப்பிட்டு வந்தால் வெகு விரைவில் குணமாகும்.
நோய் எதிர்ப்பு
இக்கீரையை தொடர்ந்து சாப்பிடுபவர்கள், உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக அதிகரிக்க செய்கிறது. பல நோய்கள் நம்மை தாக்காதவாறும் நம்மை காக்கிறது.
வயிற்று பிரச்சனை
காலை உணவுகளை தவிர்ப்பதாலும், சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இதனால் உணவு செரிமானம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பரட்டை கீரையை சாப்பிடுவதால் குடல் புண்களை குணமாக்கி, மலச்சிக்கல் பிரச்சனை நீக்குகிறது.
சிறுநீரகம் பிரச்சனை
உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சில சிறுநீரக பிரச்சனை ஏற்படுகிறது. பரட்டை கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரைந்து வெளியேறும். உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
எலும்பு பிரச்சனை
வயதாகும் காலத்தில் எலும்புகளின் உறுதி தன்மை குறைந்து கொண்டே வரும். பரட்டை கீரையில் எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுவடையச் செய்யும் சத்துகள் அதிகம் இருக்கின்றன. பரட்டை கீரையை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள், மூட்டுகள் வலுவடையும்.
உடல் எடை குறைப்பு
சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பரட்டை கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
இதய பிரச்சனை
இதய பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும், பரட்டை கீரையை தினந்தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
சரும பிரச்சனை
பரட்டை கீரையை நன்றாக அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் வெட்டுக்காயங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.