ஊர் : திருக்கூடலூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு.
மூலவர் : வையம்காத்த பெருமாள்
உற்சவர் : ஜெகத்ரட்சகன்
தாயார் : பத்மாசனவல்லி
ஸ்தலவிருட்சம் : பலா
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
சிறப்பு திருவிழாக்கள் : வைகாசி விசாகத்தில் 10 நாட்கள் பிரமோட்சவம்
திறக்கும் நேரம் : காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00மணி முதல் இரவு 7:30மணி வரை.
தல வரலாறு
இரண்யாட்சகன் எனும் அசுரன் ஒரு சமயம் பூமாதேவியுடன் சண்டையிட்டு பூமியை பாதாள உலகிற்குள் எடுத்துச்சென்று மறைத்து வைத்தான். எனவே பெருமாள் வராக அவதாரம் எடுத்து பாதாளத்திற்குள் சென்று அவனை மீட்டு வந்தார். பெருமாள் இங்கு தரையைப் பிளந்து பூலோகம் சென்று, அருகில் ஸ்ரீமுஷ்ணத்தில் பூமாதேவியை மீட்டு வெளியில் வந்தார் என தல வரலாறு கூறுகிறது. வையகத்தை காத்து மீட்டு வந்தவர் என்பதால் இவர் “வையங்காத்தபெருமாள்’எனப்படுகிறார்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 8 வது திவ்ய தேசம். கருவறைக்கு பின்புறத்தில் ஸ்வாமிக்கு இடது புறத்தில் தலவிருட்சமான பலா மரத்தில் இயற்கையாகவே சங்கு வடிவம் தோன்றியிருக்கிறது. இந்தக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு பெருமாள் தன் கையில் கிளம்புவதற்கு தயார் நிலையில் இருக்கும் “பிரயோகச்சக்கரத்துடன்’இருக்கிறார். அம்பரீஷன் எனும் மன்னர் பெருமாள் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். தன் படைகள் மீது கவனம் செலுத்தாமல் பக்தியிலேயே திளைத்திருந்தான். இதனால் எதிரியுடன் தான் நாட்டை இழந்தான். ஆனாலும் கவலை கொள்ளாத மன்னர் பெருமாளுக்காக விரதங்கள் இருப்பதிலேயே கவனமாக இருந்தார்.
ஒரு சமயம் ஏகாதசி விரதம் இருந்த பொழுது துர்வாச முன்னிவர் அவரை பார்ப்பதற்கு வந்தார் . மன்னர் துர்வாசரை கவனிக்கவில்லை. மன்னர் தன்னை அவமதிப்பதாக எண்ணி துர்வாசர் சபித்தார். மஹரிஷின் கோவத்திற்கு ஆளான மன்னன் மனம் வருந்தி மஹாவிஷ்ணுவை வேண்டினர். தன் பக்தனை காப்பதற்காக மஹாவிஷ்ணு துர்வாசகர் மீது சக்ராயுதத்தை ஏவினார். ஆதலால் துர்வாசர் மஹாவிஷ்ணுவை சரணடைந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டார். மஹாவிஷ்ணு மன்னித்து அருளினார்.
மன்னர் பிற்காலத்தில் பெருமாளுக்கு கோவில் கட்டி வழி பட்டான். உலகிலுள்ள புன்னிய நதிகளில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பர். அந்நதிகள் காவிரியில் சேர்ந்து தன் பாவங்களை போக்கிக்கொள்ளும் என்று ஐதீகம். இப்படியாக மொத்த பாவங்களும் சேர பெற்ற காவிரி பாவங்கள் தீர,பிரம்மாவிடம் வழி கேட்டார். பூலோகத்தில் இக்கோவிலுள்ள பெருமாளை வழி பட்டால் பாவங்கள் நீங்கும் என்றார். அதன் படி பெருமாளை வேண்டி தன் பாவங்களை போக்கி கொண்டால் காவேரி. எனவே இங்கு வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நவக்கிரக தலங்களில் கேது தலமான இங்கு பௌர்ணமியில் 108 தாமரை மலர்களுடன்” ஸ்ரீ ஷிக்த கோமம்”நடக்கிறது. பெருமாள் இத்தலத்தில் வராக அவதாரம் எடுத்து உட்சென்றார். கருவறையில் சுவாமியின் பாதங்களுக்கு இடையில் இருக்கும் இடமே உலகில் மைய பகுதி என்கிறார்கள். நந்தக முனிவர் தேவர்களோடு வந்து வழிபட்டு சென்றனர். என்னவே”இவூர்”கூடலூர் என்ன பெயர் பெற்றது.