ஊர் : திருச்சேறை
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
மூலவர் : சாரநாதன்
தாயார் : சாரநாயகி-பஞ்சலெட்சுமி
தீர்த்தம் : சார புஷ்கரிணி
சிறப்பு திருவிழாக்கள் : 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இந்த சாராபுஷ்க்கரணியில் நீராடுவது என்பது மகாமகத்திற்கு ஈடானது என்பதால் இதை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திறக்கும் நேரம் : காலை 6:00மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
பிரம்மா பிரளய காலத்தில் இத்தலத்து மண்ணை எடுத்து ஒரு கடம் செய்து அதில் தேவர்களை வைத்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது. அனைவரும் கங்கையே சிறந்தவள், அங்கு சென்று நீராடினால் பாவங்கள் தொலையும் என்று பெருமை பேசுகிறார்கள். அத்தகைய பெருமை எனக்கும் வேண்டுமென காவிரித்தாய் ஒருமுறை பெருமாளிடம் கேட்டாள். அதற்காக சார புஷ்கரணியில் மேற்கே அரசமரத்தடியில் தவமிருந்தாள்.
இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் குழந்தை வடிவில் காவிரித்தாயின் மடியில் தவழ்ந்தார். தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என காவிரி கூறியவுடன், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமியுடன் காட்சி கொடுத்து வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு காவிரி தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கு காட்சி தர வேண்டும். கங்கையிலும் மேன்மை எனக்கு தந்தருள வேண்டும் என்றாள். பெருமாளும் அப்படியே செய்தார்.
மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித்தாய் இருப்பதை இன்றும் காணலாம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 15 வது திவ்ய தேசம். இத்தலத்தில் மட்டும்தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி ,சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். காவிரித்தாய் இத்தல இறைவனின் தரிசனம் பெற்றுள்ளார். பூதேவியின் தந்தை மார்க்கண்டேயர் இத்தலத்தில் தான் முக்தியடைந்தார்.
மார்க்கண்டேயர் சிறு வயதான தன் மகளை பெருமாள் விரும்புகிறார் என்று அறிந்து. “சுவாமி’ சிறு பெண் இவளுக்கு சரியாக உப்பு கூட போட்டு சமைக்க தெரியாது. இவளை எப்படி உங்களுக்கு திருமணம் செய்து முடிப்பது என்று வினவினார்? இவள் ,உப்பு போடாமல் சமைத்தாலும் அதை நான் திருப்தியாக ஏற்றுக் கொள்வேன் என்று கூறி பூதேவியை திருமணம் செய்து முடித்தார் பெருமாள். அன்றிலிருந்து பெருமாளுக்கு உப்பிலியப்பன் என்ற திருநாமத்துடன், உப்பில்லாத நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்கிறார்.
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி சன்னதியில் திருப்பணிக்காக அழகிய மணவாள நாயக்கர் மன்னன் ஆணைப்படி ,இவ்வூர் வழியாக வண்டிகள் சென்றன. வண்டிக்கு ஒரு கல்வீதம் இக்கோயில் திருப்பணிக்கு நரசபூபாலன் என்பவர், மன்னனுக்கு தெரியாமல் இறக்கி வைத்தான். இதைக் கேள்விப்பட்ட மன்னன் விசாரிக்க இங்கு வந்தான். இதனால் பயந்த நரச பூபாலன் இத்தலப் பெருமானை வணங்கினான். பெருமாள் மன்னனுக்கு மன்னார்குடி ராஜகோபாலன் ஆக காட்சி கொடுத்தார். மகிழ்ந்த மன்னன் இக்கோவிலுக்கு சிறப்பாக திருப்பணிகள் செய்தான்.