நாண்மதியப்பெருமாள் கோவில் வரலாறு

ஊர்: தலச்சங்காடு

மாவட்டம்: நாகப்பட்டினம்

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : நாண்மதியப்பெருமாள்

உற்சவர்: வெண்சுடர்ப்பெருமாள், செங்கமலவல்லி

தாயார் : தலைச்சங்க நாச்சியார்

தீர்த்தம்: சந்திர புஷ்கரணி

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி.

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு

நவகிரகங்களில் சந்திரன் மிக அழகானவர். இவர் தேவ குருவிடம் பல கலைகள் கற்று தேர்ச்சி பெற்றார். ஒருசமயம் தேவகுருவின் மனைவியான தாரையை, சந்திரன் நேருக்கு நேர் பார்க்க நேரிட்டது. அதில் சந்திரனும் தேவகுருவின் மனைவியும், ஒருவருக்கு ஒருவர் விரும்ப தொடங்கினர். இதை கண்ட குரு சந்திரனுக்கு குஷ்ட நோய் ஏற்பட சாபமிட்டார்.

மேலும் சந்திரன் மற்றொரு சாபமும் பெற்று இருந்தார். தக்கனுக்கு 27 மகள்கள், இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். அவ்வாறு சந்திரனுக்கு மணமுடித்தார் தக்கன். அப்போது 27 மனைவியிடமும் ஒரே மாதிரியான அன்பு செலுத்துவதாக தக்கன் இடம் சந்திரன் வாக்கு கொடுத்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே அவர் மிகுந்த பாசமாக இருந்தார். எனவே கோபம் கொண்ட தக்கன் “உன் அழகும் ஒளியும் தினம்தினம் குறையட்டும்’ என சாபமிட்டார்.

இந்த இரண்டு சாபங்களும் சந்திரனை மிகுந்த மன வேதனை அடைய வைத்தது. வேதனையுற்ற சந்திரன் பெருமாளிடம் தன் குறையை கூறினான். அப்போது பெருமாள், ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்கநாண்மதியம் ஆகிய மூன்று தளங்களுக்கு சென்று தீர்த்தத்தில் நீராடினால் உன் சாபம் நீங்கும் என்றார்.

அவ்வாறு ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் சென்று வழிபட்ட சந்திரன், இறுதியாக தலைச்சங்காடு வந்து குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டதால், அக்கணமே சந்திரனுக்கு ஏற்பட்ட சாபமும், நோயும் விலகியது. பெருமாள், சந்திரனுக்கு காட்சி கொடுத்து அவனை தலையில் சூட்டிக் கொண்டார்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 25 வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பெருமாள் சந்திரனை தலையில் சூடிய நிலையில் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். சந்திரதோஷம் உள்ளவர்கள் இத்தலம் வந்து பெருமாளையும், தாயாரையும் வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறுவதாக ஐதீகம்.

Recent Post

RELATED POST