ஊர் – தூப்புல்
மாவட்டம் -காஞ்சிபுரம்.
மாநிலம்– தமிழ்நாடு.
மூலவர் – விளக்கொளி பெருமாள்
தாயார் -மரகதவல்லி
தீர்த்தம் – சரஸ்வதி தீர்த்தம்
திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
தல வரலாறு
படைக்கும் தொழிலான பிரம்மனுக்கு தனக்கென பூலோகத்தில் ஒரு கோயில் இல்லை என வருத்தம் இருந்தது. எனவே சிவனை நோக்கி யாகம் ஒன்றை நடத்தினார். அதில் தன் மனைவியான சரஸ்வதி தேவியை விலகியதால் சினம் கொண்ட தேவி. பிரம்மா நடத்தும் யாகம் வெளிச்சமின்றி இருண்டு போகட்டும் என சாபமிட்டார்.
இந்த யாகம் தடைபடாமல் இருக்க பிரம்மன் பெருமாளிடம் கோரிக்கை வைத்து வேண்டினார். பெருமாளும் அவனது கோரிக்கையை ஏற்று ஜோதி வடிவில் காட்சி கொடுத்து யாகத்தை சிறப்பித்தார். இதனால் இத்தல பெருமாள் “விளக்கொளி பெருமாள்’ என்றும் “தீபப் பிரகாசர்’ என்றும் பெயர் பெற்றார்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 46 வது திவ்யதேசம். தர்ப்பைப்புல் வளர்ந்த காட்டு பகுதியாக இருந்த இடத்தில் திருமால் காட்சி கொடுத்திருக்கிறார். எனவே இப்பகுதி “தூப்புல்’ எனவும் “திருத்தண்கா” எனவும் அழைக்கப்படுகிறது.
வைணவ ஆச்சாரியரான வேதாந்த தேசிகன் இத்தளத்தில் அவதரித்துள்ளார். இவரது தாய் தனக்கு பிள்ளை வரம் வேண்டி, திருப்பதி பெருமாளை வேண்டினார். இவரது வேண்டுகோளை ஏற்று ஏழுமலையான் தன் கையில் இருக்கும் மணியை இவருக்கு குழந்தையாக பிறக்கும் படி அருளினார். இதனால்தான் இன்றும் கூட திருப்பதி கோயிலில் பூஜையின்போது மணியடிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
1268 ஆம் ஆண்டு பிறந்த இவர், 1369 வரை நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கினார். கோயிலுக்குள் தாயார் சன்னதி அருகில் வேதாந்த தேசிகனுக்கு தனி சன்னதி உள்ளது. இவர் வணங்கிய லட்சுமி ஹயக்ரீவர் விக்ரகம் இன்றும் உள்ளது. கல்வியில் சிறக்கவும், குழந்தை வரம் வேண்டியும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
மேலும் அனைத்து 108 திவ்ய தேசங்கள் வைணவத் தலங்களின் வரலாற்றை இங்கு அறிந்து கொள்ளலாம்.