வலுவான கூந்தலுக்கு இயற்கையான ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்.

உங்கள் தலைமுடியை பாதுகாக்க விரும்பினால் ரசாயனம் இல்லாத இயற்கையான பராமரிப்பு பொருள்களை பயன்படுத்த வேண்டும். இயற்கையான பொருட்கள் மூலம் ஷாம்பு தயாரித்து பயன்படுத்தலாம். இது இளநரை, முடி உதிர்தலை தவிர்த்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

சந்தையில் கிடைக்கும் பல்வேறு ஷாம்புகளை விட வீட்டில் இயற்கையாக தயாரிக்கும் ஷாம்பு வகைகள் சிறந்தது. அந்த வகையில் நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சிகைக்காய் போன்ற பொருட்களை வைத்து எப்படி ஷாம்பு தயாரிப்பது என்று பார்ப்போம்.

ஷாம்பு தயாரிக்கும் முறை

பூந்திக்கொட்டை – 8

சிகைக்காய் – 6

நெல்லிக்காய் – 4

நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவிடவும். பிறகு சிகைக்காய் பூந்திக்கொட்டை இரண்டையும் நீரில் ஊறவிடவும். காலையில் இதனை இலேசாக சூடாக்கி கொதி வரும் போது இறக்கி ஆறவிடவும். பிறகு இதை ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டினால் ஷாம்பு போன்று வரும். அதனை கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகளவு இருக்கிறது. இது சேதமடைந்த முடி மற்றும் செல்கள் சரிசெய்ய உதவுகிறது. மேலும் முடி உதிர்தல், வழுக்கை, நரைமுடி பிரச்சனைகளுக்கும் நெல்லிக்காய் நல்ல தீர்வாக இருக்கும்.

பூந்திக்கொட்டை

பூந்திக்கொட்டை கூந்தலுக்கு அதிகமாக நன்மைகளை தரும். முடியை ஆழமாக சென்று சுத்தப்படுத்தும் குணம் பூந்திக்கொட்டைக்கு உண்டு. முடியின் மயிர்க்கால்கள் வலுப்பெற்று முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். முடி வேகமாக வளர்வதற்கும் பளபளப்பாக இருப்பதற்கும் பூந்திக்கொட்டை உதவுகிறது.

சீயக்காய்

சீயக்காய் காலங்காலமாக கூந்தலுக்கு பயன்படுத்தி வரும் பொருள். இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு அதிக நன்மை தரும்.

Recent Post