நீங்கள் தினம் கீரைகள் சாப்பிடுறீங்களா? அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது தெரியுமா?

உலகில் ஆயிரக்கணக்கான கீரைகள் உள்ளன. அதில் மக்கள் உணவுக்காகப் பயன்படுத்துவது நூறுக்குள்ளேயே அடங்கும். நமது நாட்டில் இன்னும் குறையும். தமிழகத்திலோ தினமும் பயன்படுத்தக்கூடிய, அதாவது சமைத்துச் சாப்பிடக்கூடிய கீரைகள் இருபது. இருபத்தைந்துக்குள்ளேயே அடங்கும்.

நல்ல பல கீரைகளை நாம் சமையலுக்கே பயன்படுத்துவதில்லை, காரணம் கீரைகளை நாம் ஓர் உணவுப் பொருளாகவே கருதுவதில்லை.

விலையுயர்ந்த பழங்களுக்கு இணையாக மிகக்குறைந்த விலைகளில் கிடைக்கும் கீரைகளில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. நாம் உடல் நலத்தோடு வாழ, ஏ, பி, சி வைட்டமின்களும் இரும்பு, சுண்ணாம்புச்சத்துக்களும் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன.

எந்தெந்தக் கீரைகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை தினமும் எடுத்துக்கொண்டால் உடல் வளம் பெரும்.

வைட்டமின் ‘ஏ’

கொத்துமல்லி, பசலைக்கீரை, கறிவேப்பிலை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, அகத்திக்கீரை.

வைட்டமின் ‘பி’

பசலைக்கீரை, வெந்தயக்கீரை, கறிவேப்பிலை, புதினா, முட்டைக் கோஸ், முளைக்கீரை, அரைக்கீரை, காசினிக்கீரை

வைட்டமின் ‘சி’

பசலைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, கொத்துமல்லி, முட்டைக்கோஸ், சிறுகீரை, மணத்தக்காளிக்கீரை, அரைக்கீரை

சுண்ணாம்புச் சத்து

பொன்னாங்கண்ணிக் கீரை, முளைக்கீரை, முருங்ககீரை, கறிவேப்பிலை, புதினா, மணத்தக்காளிக் கீரை, வெந்தயக்கீரை, தூதுவளைக் கீரை.

இரும்புச் சத்து

முளைக்கீரை, ஆரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை. புதினா, கொத்துமல்லி.

மேற்கண்ட ஐந்து சத்துக்களும் மிக அதிகமாகக் கொண்டுள்ள கீரைகளே இவைகள். ஐந்து முக்கிய சத்துக்களும் நமது உடம்பில் சரிவிகிதமாய் இருந்தால்தான் உடம்பில் நோயின்றி வாழமுடியும்.

ஐந்து சத்துக்களும் நிரம்பிய கீரைகள் ஒன்றிரண்டு இருக்கின்றன. இவைகளையாவது தினமும் சாப்பிட்டுவந்தால் உடல் வலுப்பெற்றுத் திகழும், மிகக்குறைந்த விலையில் அபரிமிதமான சத்துக்களும், மருத்துவப் பயன்களும் கொண்ட கீரைகளை தினம் பயன்படுத்த வர உடல் ஆரோக்கியம் பெருகும்.

Recent Post

RELATED POST