பெண்கள் தினமும் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள் இதோ..!

பெண்கள் தினமும் எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் ஃபோலேட் நிறைந்த உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை வைட்டமின் பி- 9 என்று அழைக்கிறோம்.

பெண்கள் தினமும் ஃபோலேட் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வதால் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஃபோலேட் நிறைந்த உணவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

ஒரு நாளைக்கு தேவையான 15 சதவீத போலிக் அமிலம் ஒரு கப் கீரையில் உள்ளது. கீரையில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டசத்துக்கள் அதிகம் காணப்படுகிறது.

தினமும் சமையலுக்கு பருப்பு வகைகளை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால் பருப்பு வகையில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. மேலும் பருப்பு வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது இதய நோய்கள் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரிசெய்யும்.

பீட்ரூட்டை சாப்பிடுவதால் நமக்கு சதவீதம் போலிக் அமிலம் கிடைக்கும். மேலும் எலும்பு வளர்ச்சி மற்றும் நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

ப்ரோக்கோலியில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளது. இதில் உடலுக்கு தேவையான 21 சதவீத போலிக் அமிலம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகளில் 18 சதவீதம் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆற்றல் அளவை அதிகரிக்க உதவும்.

Recent Post