ஆண்களுக்கான முடி வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள், பெண்களின் உடலில் சுரக்கும்போது தேவையற்ற முடி வளர்கிறது. இதிலிருந்து விடுபட இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும்.
எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள முடி படிப்படியாக நீங்கும்.
பாலில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு கடலை மாவு, தேவையான அளவு மஞ்சள் தூள், சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டு போல் தயார் செய்யவும். இதனை கையில் எடுத்து முகத்தில் உள்ள ரோமங்களின் மீது தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் முடி வளர்வது குறையும்.
சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முடி உள்ள இடங்களில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்திக்கை கழுவ வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள முடிகள் நீங்கும்.