நமது உடலின் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில்தான் இருக்கின்றன. உடலின் மென்மையான பாகங்களில் பாதமும் ஒன்று.
வெது வெதுப்பான நீரில் கல் உப்பு போட்டு அதில் பாதங்களை அரை மணி நேரம் ஊற வைத்து , பின் ஸ்கர்ப் கொண்டு பாதங்களைத் தேய்க்க வேண்டும். பிறகு மென்மையான டவலால் கால்களைத் துடைக்கவும். இறுதியாக கால் பாதங்களில் தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும்.
பாதங்களுக்கு மசாஜ் செய்யும் போது உடலின் முக்கிய நரம்புகள் தூண்டப்படுகிறது. இதனால் மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கிறது. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே அதனை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இரவு நேரத்தில் பாதங்களைக் கழுவி பராமரித்து வந்தால் இறந்த செல்கள் நீங்கும். இரத்த ஓட்டம் தூண்டப்படும். மூட்டு வலிகள், தசை வலிகள் குணமாகும். மூளையும் மனதும் அமைதி ஆவதால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.