வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் காட்டு குதிரை முதலில் உணவுக்காக வேட்டையாடப்பட்டது .
உலக நாடுகள் குதிரையை விளையாட்டாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள். அதில் அரேபிய நாட்டுக் குதிரைக்கு மவுசு அதிகம்.
இங்கிலாந்து நாட்டில் 12-ம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக குதிரைப் பந்தயம் நடத்தப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குதிரைப் பந்தயம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்தது.
1751-ம் ஆண்டு குதிரைப் பந்தயத்திற்காக சட்டங்கள் இயற்றப்பட்டன. 1793-ம் ஆண்டு குதிரைப் பந்தயம் குறித்த முதல் செய்தித்தாள் வெளியானது.
குதிரை பாலூட்டி இனத்தை சேர்ந்த ஒரு தாவர உண்ணி. கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. குதிரையின் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
குதிரைக்குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடுகின்றன. ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன.
நவீன ரகக்குதிரை 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தை கொண்டுள்ளது. சில குதிரைகள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கூட உயிர் வாழ்ந்துள்ளன.
ஒரு குதிரையின் வயது மதிப்பீடு அதன் பற்கள் மூலம் கணக்கிட முடியும். குதிரையின் வாழ்நாள் முழுவதும் அதனுடைய பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும்.
நன்கு வளர்ந்த ஒரு குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவை சாப்பிடும். 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும்.
குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான ஒரு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும்.
குதிரையை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். குதிரைகளை போர்களுக்குப் பயன்படுத்திய பெருமை இந்திய அரசர்களைச் சாரும்.