அளவுக்கு அதிகமாக இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்..!

இளநீர் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இருப்பினும் இளநீரை அதிகமாக குடிப்பதால் வரும் பிரச்சனைகள் என்ன? ஒரு நாளைக்கு எவ்வளவு இளநீரை குடிக்க வேண்டும் என்பதை இதில் பார்ப்போம்.

உடலுக்குத் தேவையான பொட்டாசியம், கால்சியம் இளநீரில் உள்ளது. ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக தேவைப்படும். அவர்களுக்கு இந்த இளநீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இளநீரை அதிகளவு எடுத்துக் கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை உருவாகும். இளநீரில் உள்ள அதிக அளவிலான பொட்டாசியம் இயற்கை டையூரிடிக் ஆக செயல்படுகிறது. அதன்படி அதிகபடியான நீரை வெளியேற்ற சிறுநீரகங்கள் உழைப்பின் தேவை அதிகமாக உள்ளது. இது தொடர்ந்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோயாளிகள் இளநீரை குடிக்கலாமா? வேண்டாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஒரு கப் தேங்காய் நீரில் 6.26 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் இளநீரை குடிக்க கூடாது.

ஒரு நாளைக்கு 250 – 300 ML இளநீர் அருந்தலாம், அளவுக்கு அதிகமாக குடித்தால் உடலில் பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டின் அளவு அதிகரிக்கும், இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம்,

உணவு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இளநீர் பல பிரச்சனைகளை உருவாக்கும். இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் தேங்காய் தண்ணீரை குடிக்க வேண்டாம்.

Recent Post