முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சாதாரண பயறுகளைவிட முளைகட்டிய பயறுகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.

முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியை தருகிறது.

முளைகட்டிய பயறுகளில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. மேலும் இது தோல் புற்றுநோயைத் தடுக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் மற்றும் கொழுப்புகளை வெளியேற்றுவதில் முளை கட்டிய தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முளைகட்டிய தானியங்களை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது ஜீரண சக்தி அதிகரிக்கும். இதனால் மலச்சிக்கல் அபாயத்தைக் குறைக்க முடியும். இது குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

Recent Post

RELATED POST