கோடை காலங்களில் தர்பூசணி பழம் விற்பனை செய்வதை நம்மால் காண முடியும். தர்பூசணி பழம் சாப்பிட்டால் தண்ணீர் தாகம் அடங்கும் என பலரும் நினைத்து சாப்பிட்டுக்கொண்டிருகிறார்கள். மேலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும்.
தர்பூசணியில் 92% தண்ணீர், 6% சர்க்கரை சத்து இருப்பதால் வெயில் காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது. மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணிப் பழம் ஜீரணத்தை சீர்படுத்தும்.
ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம்.
தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிந்து உடல் குளிர்ச்சி அடையும்.
தர்பூசணிப் பழசாறுடன் பால் கலந்து குடித்தால் தொண்டை வலி நீங்கும்.மேலும் கண்கள் குளிர்ச்சியாகும்.
தர்பூசணி பழம் ரத்தக் கொதிப்பினை தடுக்கும் சக்தி கொண்டது. தர்பூசணிப் பழசாறு சாப்பிடுவதால் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.
கண் அழுத்த நோய், மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கண் குறைபாடு குணமாகும்.
தர்பூசணி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.
தர்பூசணி பழங்கள் அதிகம் சாப்பிடுவதால் புற்று நோய் எதிர்ப்பாற்றல் வளருகிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.