மைதா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்..!

இப்போதைய காலகட்டத்தில் நிறைய பேர் மைதா மாவில் தயாரித்த உணவுகளே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றார்கள். இன்று உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். அந்த சர்க்கரை நோயை உண்டாக்கிய பெருமை மைதாவையே சேரும் என்று சொல்லலாம்.

மைதா மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

கோதுமையில் இருந்துதான் மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு அதிலிருந்து மைதா மாவு எடுக்கப்படுவதால் அது பழுப்புநிறத்தில் இருக்கிறது. இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் என கேடு தரும் பல இராசயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

மைதா உணவுகளால் ஏற்படும் ஆபத்துக்கள்

பேக்கரி உணவுகள், பரோட்டா, சமேசா, பிஸ்கட், பீட்சா , நூடுல்ஸ் போன்ற பல உணவுகள் மைதா மாவிலிருந்து செய்யப்படுகின்றது. இதில் நார்ச்சத்து இல்லாத காரணத்தால் உடலில் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

Also Read This : அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

மைதா வகை உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும்.

மைதா உணவில் அதிகளவு எண்ணெய் சேர்க்கப்படுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும். மேலும் இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை உருவாக்கும்.

மைதாவில் நார் சத்து கிடையாது. மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல. மைதா மாவில் செய்யப்படும் உணவுகளால் உடலுக்கு எந்த விதமான நன்மையும் கிடையாது.

Recent Post

RELATED POST