நாளுக்கு நாள் மொபைல் பயனாளர்கள் மற்றும் பயன்பாட்டு நேரம் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, உங்கள் நேரத்தை மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தையும் சேர்த்து வீணடித்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் தூங்க நினைத்தாலும், உங்களது மூளை நீண்ட நேரத்திற்கு உங்களை தூங்க விடாமல் செய்கிறது. அதிகமாக மொபைல் பயன்படுத்துவதால் 74 சதவீதம் பேர் மனரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 61 சதவீதம் பேர் உடல்ரீதியான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
முடிந்தளவு உறங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பாவது உங்கள் எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து உங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இது உங்களின் மூளைக்கும், எதிர்கால ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நீங்கள் உறங்க செல்வதற்கு 30 நிமிடங்கள் முன்பாகவே ஓய்வு நிலைக்கு சென்றால் மட்டுமே நீங்களும் உங்கள் மூளையும் இணைந்து உறங்க முடியும்.
உறங்க செல்வதற்கு முன்பு நீங்கள் என்ன விதமான கன்டன்ட்டுகளை பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். நெகட்டிவ் கன்டன்ட்டாக இருந்தால் அது உங்களது உறக்கத்தை பாதிக்கலாம். மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் உறங்க செல்வதற்கு முன்பு உங்களை மகிழ்ச்சியடைய செய்யும் விஷயங்களை மட்டும் பாருங்கள்.