ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது என்று பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. ஏனென்றால் இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும் கலோரிகள் அதிகமாகவும் இருக்கிறது. மேலும் இதில் அதிகளவு கெட்ட கொழுப்புகளும் நிறைந்துள்ளது.
அடிக்கடி ஜங்க் ஃபுட்ஸ்களை சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு மற்றும் கெட்ட கொலஸ்டராலின் அளவும் அதிகரித்துவிடும். இது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் அதிகரிக்கும்.
ஜங்க் ஃபுட்ஸில் அதிகளவு சோடியம் உள்ளது, இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
ஜங்க் ஃபுட்ஸில் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைகள் விரைவில் செரிமானமடையும் என்றாலும் இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.