பலரும் தங்கள் நாளைத் தொடங்கும்போதோ அல்லது சோர்வாக உணரும்போது ஒரு கப் சூடான காபியை குடிப்பதை விரும்புகின்றனர். காபி குடிப்பது நமது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
சூடான காபி, குளிர்ந்த காபி, பிளாக் காபி என காபியை தேர்வு செய்கின்றனர். ஒரு கப் காபி டைப் 2 நீரிழிவு நோயின் பரவலைக் குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.
தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் காபி குடிப்பது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.
காபியில் காஃபின் என்கிற பொருள் உங்கள் உடலிலுள்ள கொழுப்பு குறைவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. பால் சேர்க்கப்படாத பிளாக் காபி குடிப்பது உங்கள் எடை இழப்புக்கு சிறந்த பலனை தரும்.
ஒரு நாளைக்கு 3 முதல் 5 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் அளவு காபி குடிப்பது ஆரோக்கியமானது என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.