அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்றீங்களா? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா உங்களுக்கு வரும்..

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தற்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். தங்களது பெரும்பாலான நேரத்தை இதிலேயே செலவிடுகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினி பயன்படுத்துவது மட்டுமல்ல. அதிக நேரம் தொலைக்காட்சியின் திரையை பார்த்து கொண்டிருப்பதும் உங்களுக்கு கெடுதலை ஏற்படுத்தும்.

நீண்ட நேரம் திரையை பார்ப்பதால் கண் சிமிட்டுவது குறைகிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்பட்டு தலைவலி உருவாகிறது.

திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி மெலடோனின் உற்பத்தியை அடக்கி, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

Also Read : காலை எழுந்தவுடன் மொபைல் பார்க்கிறீர்களா உங்களுக்கு ஒர் எச்சரிக்கை செய்தி

திரைகளில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அறிவாற்றல் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது.

நீண்டநேரம் திரையின் முன் அமர்ந்திருப்பது கார்பல் டன்னல் சிண்ட்ரோம் போன்ற மன அழுத்த நோய்களை ஏற்படுத்தும். எனவே உங்கள் கண்களுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுங்கள், சில நிமிடங்கள் உங்கள் கண்களை திரையிலிருந்து விலக்கி வையுங்கள்.

Recent Post

RELATED POST