தமிழ்நாட்டில் 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் சராசரியாக கோடையில் பதிவாகியுள்ளது. இதனையே பொதுமக்கள் தாங்க முடியாத நிலையில் சுமார் 65 முதல் 70 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவக்கூடிய இடம் ஒன்று உள்ளது.
ஈரானில் உள்ள லுட் பாலைவனம்தான் அந்த அதி வெப்பமான பகுதி. இந்த பாலைவனத்தில் உயிர்கள் இல்லை. அங்கு தாவரங்களோ விலங்குகளோ இல்லை. ஏனென்றால் அங்கு உயிர்கள் இருப்பது சாத்திய கூறுகளே கிடையாது.
அங்கு ஒரே நேரத்தில் 70.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதன் விளைவாக, அங்கு உயிர்கள் இருப்பது சாத்தியமற்றது. ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு இதனை பாரம்பரிய தளமாக அறிவித்திருக்கிறது.