மஞ்சள் காமாலை பிரச்சனையை விரட்டும் அதலைக்காய்

அதலைக்காய் என்ற பெயர் சிலருக்கு புதிதாக இருக்கும். இது காற்கறி வகையை சேர்ந்ததா என்ற சந்தேகமும் சிலருக்கு எழும். உண்மையில் இது அற்புதமான காய்கறி வகையை சேர்ந்ததுதான் இந்த அதலைக்காய்.

அதலைக்காயில் புரதம் மற்றும் தாது உப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன. 100கிராம் அதலைக்காயில் 6.42 கி. நார்ச்சத்து, 72 மி.கி. சோடியம் மற்றும் 290 மி.கி. உயிர்ச்சத்து சி உள்ளது.

ஆரோக்கியமான எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, இதயத்துடிப்பு, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிற்கும் அதலைக்காய் இன்றியமையாதது.

அதலைக்காய் நெடுங்காலமாக நாட்டு மருத்துவத்தில் நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும் குடற்புழுக்களுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை சாப்பிட வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியவை நீங்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச் சத்து குறையும். நாட்டப்பட்ட புண்கள் ஆறும்.

கசப்புத்தன்மையுடைய அதலைக்காய் ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கிருமிகளை வெளியேற்றும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் இந்த காயை தினந்தோறும் அவர்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மஞ்சள் காமாலை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Recent Post

RELATED POST