அண்மை காலமாக 10 ரூபாய் நாணய புழக்கம் குறித்த தவறான எண்ணங்கள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்பதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். ஆனால், 10 ரூபாய் நாணயங்களை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கி மேலாளர், பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சில்லறை கிடைக்காததால் பல வியாபாரிகள் 10 ரூபாய் நாணயங்களை மறுத்து வருகின்றனர். இது குறித்து ரிசர்வ் வங்கி பலமுறை கூறியுள்ளது.
இந்த சிக்கலை தவிர்க்க வங்கிக்குச் சென்று உங்களிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பத்து ரூபாய் நாணயத்தை எங்கு வேண்டுமானாலும் கொடுத்து பொருள் வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.