தயிர் சாப்பிடும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தயிர் உடலுக்கு நல்லது என்றாலும் தயிர் சாப்பிடும்போது ஒரு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அப்படி தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இதில் பாப்போம்.

தயிர் பச்சடி என்றாலே பலரும் வெங்காயம்தான் சேர்ப்பார்கள். இதில் வெங்காயம் சூடான பொருள் தயிர் குளிர்ச்சி. இவை இரண்டும் ஒன்று சேர்வதால் அலர்ஜி, வயிற்றுக்கோளாறு, மந்த நிலை உருவாகும்.

மீன் , தயிர் இரண்டுமே அதிக புரோட்டீன் நிறைந்ததுதான். ஆனால் இரண்டையும் ஒன்று சேர்க்கக் கூடாது. இரண்டும் வெவ்வேறு வகையான புரோட்டீனைக் கொண்டிருப்பதால் உடலில் பாதிப்பை உண்டாக்கலாம்.

பாலிலிருந்துதான் தயிர் உருவாகிறது என்றாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்வது தவறு. மீறினால் வயிற்றுப்போக்கு, வாயு, நெஞ்சு எரிச்சல் போன்றவை ஏற்படும்.

தயிருடன் உளுந்து சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு ஏற்படும்.

தயிர் சாப்பிடும் போது எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அதே போல் நெய் ஊற்றிய உணவுகளையும் எடுத்துக்கொள்ள கூடாது.

Recent Post

RELATED POST