கிராம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது அசைவ உணவில் சேர்க்கப்படும் முக்கியமான ஒரு நறுமணப் பொருளாகும். இந்த கிராம்பை பாலில் கலந்து குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கிராம்பு பாலை இரவில் குடித்து வரலாம்.
தினமும் இரவில் கிராம்பு பாலை குடித்து வந்தால் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். பிறப்புறுப்பு பகுதிகளில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது, விந்தணுக்களின் தரம் அதிகரிப்பது போன்றவை ஏற்படும்.
நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களை தவிர்க்க கிராம்பு பால் சிறந்த மருந்தாக இருக்கிறது. கிராம்பு பாலில் ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்து இருக்கின்றன.
இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கச் செய்து வைரஸ் தொற்றுக்கள் மற்றும் பருவ காலத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
கிராம்பு பால் தயார் செய்வது எப்படி?
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு காய்ந்ததும் அதில் 4 கிராம்பை தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அணைத்து விட்டு, அதில் தேன் சேர்த்து வெதுவெதுப்பான நிலையில் குடித்து வரலாம்.